Regional02

மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க பயிற்சி :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் ஒன்றியம் கொட்டாரக்குறிச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் சார்பில் ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்தல் தொடர்பாக ஊராட்சி மகளிர் கூட்டமைப்புகளுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நலிந்தோர் 3 பேருக்கு தொழில் தொடங்கிட ரூ.1.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிச்சை, ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT