Regional01

கிணற்றில் இருந்து 2 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அடுத்த அவலூர் பேட்டை சாலை, கிருஷ்ணா நகரில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே 2 ஜோடி செருப்புகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் இருப்பது நேற்று காலை தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த தி.மலை கிழக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, 2 இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

விசாரணையில், “தி.மலை கல் நகரில் வசித்த பிரபாகரன் (29) மற்றும் ஐந்தாவது புதுத்தெருவில் வசித்த வெங்கடேசன் (21) என்பது தெரிய வந்தது. நண்பர்களான இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்கள், நேற்று முன்தினம் கிணற்றின் அருகே மது அருந்தியபோது, கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப் படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

SCROLL FOR NEXT