Regional02

ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷாவின் 13-வது நினைவு தினம் அனுசரிப்பு :

செய்திப்பிரிவு

நாட்டின் முதல் ஃ பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷாவின், 13-வதுநினைவுதினமான நேற்று, உதகையில் அவரது கல்லறையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ஃ பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா, 40 ஆண்டு காலம் ராணுவசேவை புரிந்தவர். இவரது பணிக்காலத்தில், ஐந்து போர்களை சந்தித்தவர். போரின்போது, பாகிஸ்தானை தோற்கடித்தவர். ராணுவ சேவையில் ஓய்வு பெற்று, குன்னூர்வெலிங்டனில் தனது இறுதிக்காலம் வரை வசித்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் உயிரிழந்தார். இவரது உடல், உதகையில் உள்ள பார்ஸி இன மக்களின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

அவரது 13-வது நினைவு தினமான நேற்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தலைவர் கமாண்டண்ட் லெப்.ஜெனரல் ஒய்.வி.கே. மோகன்அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புபடைத் தலைவர் மற்றும் முப்படைத்தளபதிகள், ராணுவ பாதுகாப்புப் பயிற்சி கல்லூரியின் கமாண்டண்ட் சார்பாக ராணுவத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT