கடலூரில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. 
Regional01

வியாபார நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க கடலூர் ஆட்சியர் அறிவுரை :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்," கரோனா தொற்று பரவல் முழுமையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும். கரோனா தொற்றுகண்டறியப்பட்டால் அந்தபகுதியை தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும். வியாபார நிறுவனங்களில் சமூகஇடைவெளியை கடைபிடிப்பதும், முகக்கவசம் அணிவதையும் தீவிரமாக வரும் நாட்களில் கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். எஸ்பி சக்திகணேசன்,கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், நோய் கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் சாயிராபானு, இணை இயக்குநர்(நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர்(சுகாதாரம்)மருத்துவர்செந்தில்குமார்,கோட்டாசியர் அதியமான் கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT