Regional01

குப்பையைப் பிரித்து உரமாக்கும் திட்டத்துக்காக - ஈரோடு மாநகராட்சிக்கு தேசிய விருது :

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 100 நகரங்களில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், ஈரோடு, கோவை உட்பட 11 மாநகராட்சிகளில் இத்திட்டம் அமலில் உள்ளது. திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநகராட்சிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தியது தொடர்பாக, திட்ட அறிக்கைகளை ஒவ்வொரு மாநகராட்சியும் சமர்ப்பித்திருந்தன. ஈரோடு மாநகராட்சி சார்பில், வீடுகளில் சேகரமாகும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து, 24 இடங்களில் நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான திட்ட அறிக்கையை ஈரோடு மாநகராட்சி சமர்ப்பித்திருந்தது.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில், இணைய வழி வாயிலாக விருது தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாநகராட்சி தாக்கல் செய்திருந்த, குறைந்த செலவில் நுண் உரம் தயாரிப்பு திட்டப் பிரிவில், தேசிய அளவில் மூன்றாவது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT