சேலம் மாவட்டத்தில் நேற்று 343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 76 பேருக்கும், வட்டார அளவில் ஓமலூரில் 43, வீரபாண்டியில் 30, சங்ககிரியில் 28, தாரமங்கலத்தில் 14, எடப்பாடியில் 13, மகுடஞ்சாவடியில் 12, சேலம், மேச்சேரியில் தலா 11, வாழப்பாடியில் 9, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், கொங்கணா புரத்தில் தலா 8, மேட்டூர் நகராட்சி யில் 7 மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 31 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 715 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் 4320 பேர் தற்போது கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.