Regional01

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் :

செய்திப்பிரிவு

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வி.என்.நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்டப் பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச் சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து சென்னையில் நடை பெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள் குறித்து விளக்கினார். அதன்பின் உள்ளாட்சி தேர்தலை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மாநில நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், செந்தில், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், பகுதிச் செயலாளர்கள் மதிவாணன், பாலமுருகன், சேகர், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT