பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திரு வெறும்பூரில் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க காட்டூர் பகுதித் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் லெனின் ஆகியோர் பேசினர். பகுதி நிர்வாகிகள் ஆதம்தீன், முருகா, செந்தில், சுபாஷ், மோகன், சாலிக், ஜாபர், பிரசாந்த், ஹரி, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளுக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல, அதைத் தரையில் கிடத்தி, மாலையிட்டு பறையிசைத்தனர்.