Regional02

அவதூறு பேச்சு; 2 அதிமுகவினர் கைது :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கூட்டம் கடந்த 24-ம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது, சங்க அலுவலகத்தில் புதிதாக வைக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்துக்கு அதிமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் படவேட்டான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் அதிமுகவினரும் செயல்பட்டுள்ளனர். இதனை, திமுகவினர் கண்டித்துள்ளனர். இதனால், இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது முதல்வர் மற்றும் திமுகவினரை அவதூறாக அதிமுகவினர் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிமுகவைச் சேர்ந்த முருகன், வினோத்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், படவேட்டான் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT