திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு. அருகி்ல், ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர். 
Regional02

தி.மலையில் தூய்மை பணியாளர்களுக்கு - ரூ.5 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண பொருட்கள் : அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணி யாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்களை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வவேலு வழங்கினார்.

அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தி.மலை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி யாளர்களுக்கு தலா ரூ.ஆயிரம் மதிப்பில் 470 பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பா.முருகேஷ், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அண்ணாதுரை எம்பி, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தனக்கோட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT