சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்புதினம் மற்றும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோர் தினத்தையொட்டி, சமூக, சமத்துவம் மற்றும்மேம்பாட்டு அமைப்பு சார்பில் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இணையவழியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் (பொ) பி.ஹேமலதா தலைமை வகித்து பேசும்போது, "மாணவர்களின் நல்வாழ்வு என்பது, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக அமைய வேண்டும்" என்றார்.
போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைப் பொருள் தடுப்பு சட்டங்கள் குறித்தும் வழக்கறிஞர் மதிவாணன் எடுத்துரைத்தார். சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா.வின்ஆதரவில் குழந்தைகள், பெண்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும்மனநலம் பாதிக்கப்பட்டோர் மீதான உலகளாவிய சித்ரவதைகள்குறித்து சமூக சமத்துவ மேம்பாட்டுஅமைப்பின் இயக்குநர் பி.பாண்டிச்செல்வி பேசினார்.