Regional03

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 24 பேர் பணியிட மாற்றம் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம் உட்பட மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் 24 வட்டார வளர்ச்சி அலுவலர்களை ஒரே நாளில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கீழ்காணும் ஒன்றியங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட புதிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவரம்: மகேஸ்வரி (கிராம ஊராட்சி, அவிநாசி), பாலசுப்பிரமணி (வட்டார ஊராட்சி, தாராபுரம்)சிவகுருநாதன்(வ.ஊ. குடிமங்கலம்), ஜீவானந்தம்(கி.ஊ. தாராபுரம்), ரமேஷ்(வ.ஊ. பல்லடம்),கந்தசாமி(வ.ஊ.உடுமலை), சுப்பிரமணியம் (கி.ஊ.குடிமங்கலம்) ரொனால்டு ஷெல்டன் பெர்னாண்டஸ் (கி.ஊ. உடுமலை), ஜெயகுமார் (வ.ஊ. வெள்ளகோவில்), விஜயகுமார் (கி.ஊ. வெள்ளகோயில்), மீனாட்சி (கி.ஊ. திருப்பூர்), ஞானசேகரன் (வ.ஊ.காங்கயம்), ஜோதிநாத் (கி.ஊ.ஊத்துக்குளி), மகுடேஸ்வரி(கி.ஊ) பானுபிரியா (வ.ஊ. மூலனூர்), எஸ்.மகேந்திரன் (வ.ஊ. மடத்துக்குளம்), பியூலாஎப்சிபாய் (வ.ஊ. குண்டடம்), அய்யாச்சாமி(கி.ஊ), கலைச்செல்வி (வ.ஊ. பொங்கலூர்) மகேஸ்வரன் (கி.ஊ) ஆகியோர் உட்பட 24 பேர் பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT