திருநெல்வேலி மாவட்டத்தில் 44 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்றைய பாதிப்பு 62 ஆக குறைந்துள்ளது. 3 பேர் மரணமடைந்துள்ளனர். 991 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பேர் உயிரிழந்தனர்.