Regional01

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் - 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியி லுள்ள ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து குருணையாகவும், மாவாகவும் அரைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருப்பதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அங்கு 30 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருச்சி வரகனேரியைச் சேர்ந்த சுரேஷ்(28), அரியமங்கலம் உக் கடையைச் சேர்ந்த ஹக்கீம்(27), காமராஜ் நகரைச் சேர்ந்த பிலவேந்திரன் (49) ஆகியோரைக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT