Regional02

ஆட்டோ தொழிலாளர்கள் நூதனப் போராட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெரம்ப லூரில் ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மல்லிஸ் குமார், ரெங்கநாதன், கலைச்செல்வன், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி வரதராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT