Regional02

போக்ஸோவில் முதியவர் கைது :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள பிள்ளாபாளை யத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (65). இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் சுந்தரேசன் அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுந்தரே சனை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT