Regional01

தேநீர் கடைக்கு தீ வைத்த இருவர் கைது :

செய்திப்பிரிவு

செய்யாறு அருகே தேநீர் கடைக்கு தீ வைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்நெல்லி கிராமத்தில் வசிப்பவர் வரதன்(52). திமுக கிளை செயலாளர். இவர், அதே பகுதியில் கொட்டகை அமைத்து தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, அதே கிராமத்தில் வசிக்கும் முனியன், சதீஷ் ஆகியோர் கடந்த 24-ம் தேதி சென்றனர். அப்போது அவர்களுக்கும், தேநீர் கடை உரிமையாளர் வரதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வரதனை தாக்கிவிட்டு சென்றவர்கள், தேநீர் கடைக்கு நள்ளிரவில் தீ வைத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து வரதன் கொடுத்த புகாரின் பேரில், தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முனியன்(53), சதீஷ்(26) ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT