Regional02

திவாகரனுக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் வசித்து வரும் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளருமான திவாகரனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவருக்கு காய்ச்சலுடன் தொண்டை வலியும் ஏற்பட்டது.

இதையடுத்து, திவாகரனை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT