குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டிடத்தில் இருந்த மின் விசிறிகள் அனைத்தும் கழற்றி வைக்கப்பட்டுள்ளன. 
Regional02

குறிஞ்சிப்பாடியில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதிய வசதியின்றி அவதி :

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதுமான வசதியில்லாதால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறிஞ்சிப்பாடி வட்டப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல், மணிலா, எள் உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விளைபொருட்களை விற்பனை செய்யும் கூடத்தில் இருந்த மின்விசிறிகள் அனைத்தும் கழற்றப்பட்டுள்ளன. இந்தக் கூடத்தில் பழைய இரும்பு சாமான்கள் மற்றும் மரங்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் காற்றோட்டம் இல்லாமலும், இட நெருக்கடியிலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் கூறுகையில், "ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு போது மான அடிப்படை வசதி இல்லை. இதே போல் குறிஞ்சிப்பாடி பகுதியில் அரசு அறிவித்தபடி பெட்டாஷ் உரம் 50 கிலோ கொண்ட மூட்டை ரூ. 850-க்கு விற்காமல் தனியார் கடைகளில் ரூ. 1,000-க்கு விற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT