Regional02

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

காரியாபட்டி அச்சம்பட்டி பகுதியில் குடோனில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காரியாபட்டி போலீஸார் நடத்திய சோதனையில் அங்கிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு (75), சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரைச் சேர்ந்த செல்வகுமார் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT