Regional01

கரூர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 6 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு : ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல்

செய்திப்பிரிவு

கரூர் அரசு காலனியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 6 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, விவசாயத்துக்குப் பயன்படுத்தப் படுவதாக ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் ராயனூரில் உள்ள புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமை ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று பார்வை யிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு வசிப்பவர் களின் கோரிக்கைகளை கேட் டறிந்த அவர், முகாமில் உள்ள கழிப்பறைகளை பார்வையிட்டார். பின்னர், நகராட்சி மூலம் போதிய எண்ணிக்கையில் புதிய கழிப்பறை களை உடனே அமைத்துக் கொடுக்க வேண்டும். தற்போது உள்ள கழிப்பறைகளை புனர மைப்பு செய்து தரவேண்டும். நாள்தோறும் குப்பையை சேகரித்து அப்புறப்படுத்த வேண் டும் என நகராட்சி ஆணையர் சுதாவுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, குடியிருப்புப் பகு திக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை ஆய்வு செய்து, அதை வேறு இடத்துக்கு மாற்றும்படி கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிர மணியனுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், நகராட்சிக் குப்பைக் கிடங்கில் குப்பையிலிருந்து உரம் தயாரித்து விவசாய நிலங் களுக்கு பிரித்து அனுப்பும் முறை, பாலம்மாள்புரத்தில் அமைந்துள்ள மின் மயானம் ஆகியவற்றை ஆட்சியர் பார்வை யிட்டார்.

அதன் பிறகு, அரசு காலனியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் கூறியபோது, “இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்தில் இதுவரை 15,221 வீட்டு கழிப்பறை இணைப்புகள் புதைசாக்கடை வழியாக இணைக்கப்பட்டு, நாள்தோறும் 6 மில்லியன் லிட்டர் கழிவுநீர் நீரேற்று நிலையம் மூலம் பம்ப் செய்யப்பட்டு, சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் நக்கீரன், வட்டாட்சி யர்கள் சக்திவேல்(கரூர்), முருகன் (புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் முகாம்) உள்ளிட்ட அலுவ லர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT