Regional01

திருச்சியில் சித்தா கரோனா புத்துணர்வு மையம் இடமாற்றம் :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த அரசு சித்தா கரோனா புத்துணர்வு மையம் ரங்கம் யாத்ரி நிவாஸூக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கரோனா தொற்றாளர்களுக்கு, காலை 6 மணிக்கு நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கப்படும். அதன்பின், வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுன்றன.

கரோனா தொற்றாளர்களுக்கு 3 வேளையும் ஆரோக்கியமான உணவுகள், அவர்களது அறிகுறி களுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மா னந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, வலி தைலம், நுகர் வுக்கு ஓமப் பொட்டலம், உடல் வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்றவை அளிக்கப்படுகின் றன என அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் உள்ள சித்த மருத்து வப் பிரிவுகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT