கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, புகழூர், கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய 7 வட்டாட்சியர் அலுவலகங் களிலும் ஜமாபந்தி(வருவாய் தீர்வாயம்) நேற்று தொடங்கியது.
மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று, இணையதளம் வழியாக பெற்ற மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று மற்றும் நாளை(ஜூன் 26, 27) நீங்கலாக, ஜூன் 30-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. எனவே, பொது மக்கள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடர்பான கோரிக்கை மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi/ என்ற இணையதளம் மூலம் சுயமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூல மாகவோ பதிவேற்றம் செய் யலாம் என ஆட்சியர் தெரிவித் துள்ளார்.