திருச்சி துப்பாக்கி தொழிற் சாலை (ஓ.எப்.டி) நிர்வாகம் சமூக பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வ தற்காக ரூ.3.30 லட்சம் மதிப்பி லான 7 ட்ராலிகளை நேற்று ஒப்படைத்தது.
இவற்றை அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அலு வலர் லெப்டினன்ட் கர்னல் கார்த்தி கேஷ் வழங்கினார். அப்போது துப்பாக்கி தொழிற்சாலை தீய ணைப்பு அலுவலர் பாலாஜி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
திருச்சி அரசு மருத்துவம னைக்கு துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் ஏற்கெனவே 3 கட்டமாக சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெச் சர்கள் உள்ளிட்டவை வழங்கப் பட்டதுடன், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், சக்கர நாற்காலி கள் போன்றவை சீரமைத்துக் கொடுக்கப்பட்டன.
இதற்காக துப்பாக்கி தொழிற் சாலை நிர்வாகத்துக்கு, டீன் வனிதா உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.