ரூ.3.75 கோடி மோசடி செய்து விட்டதாகக் கூறி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் முன்பு சிவகாசி ஜெயலட்சுமி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி மன்னார்புரத்தில் ‘எல்பின் இ-காம்’ என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் முறைகேடு மற்றும் மோசடியில் ஈடுபடுவதாக ஏராள மானோர் புகார் அளித்துள்ள நிலையில், அதுதொடர்பாக வருமான வரித் துறை மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பல ஆண் டுகளுக்கு முன்பு சில காவல் துறை அதிகாரிகள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சிவகாசி ஜெயலட்சுமி நேற்று முன்தினம் இரவு முதல் எல்பின் நிறுவனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த கன்டோன்மென்ட் காவல் உதவி ஆய்வாளர் செல்வ சுந்தரம் உள்ளிட்டோர் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, எல்பின் நிறுவனத்தில் தானும், தன்னைச் சார்ந்தவர்களும் ரூ.3.75 கோடி வரை முதலீடு செய் துள்ளதாகவும், முதிர்வு காலம் முடிந்து ஓராண்டாகியும் தங்க ளுக்கு உரிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் நிலையத் துக்கு வந்து புகார் அளிக்குமாறு போலீஸார் கூறியும், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜெயலட்சுமி, பணம் கிடைக்கும் வரை இங்கி ருந்து செல்லமாட்டேன் எனக் கூறி அங்கேயே அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டுள்ளார். இதைய டுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.