திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை, பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2021-2022-ம் கல்வியாண்டுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவ தற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அனைத்து மாணவர் களுக்கும் கல்வி உதவித்தொகை விடுபடாமல் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சாதிச் சான்றிதழ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் மாணவர்களின் ஆதார் எண் இணைத்து தாங்கள் பயிலும் கல்லூரிகள், பள்ளிகள் மூலமாக விண்ணப்பம் செய்து கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கல்வி உதவித்தொகை பிரிவு தொலைபேசி எண்: 0462-2501076 மற்றும் மின்னஞ்சல் முகவரி scholarship.tnv@gmail.com-ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.