தூத்துக்குடியில் நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கான ஆலோசனைக் கூட்டத் தில் சுகாதார பணிகள் இயக்க திட்ட இயக்குநர் எஸ்.உமா பேசினார். படம்: என்.ராஜேஷ் 
Regional02

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் - 22,000 பயனாளிகளுக்கு கரோனா சிகிச்சை : ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திட்ட இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதல்வரின் விரிவானமருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுகாதார திட்டப் பணிகள் இயக்கதிட்ட இயக்குநர் எஸ்.உமா பேசியதாவது: முதல்வரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்துக்குஒவ்வொரு மருத்துவமனையும் 2 அலுவலர்களை நியமிக்க வேண்டும். சிகிச்சைக்கு வரும்நோயாளிகளிடம் காப்பீட்டுதிட்ட அட்டைஇல்லை எனில் நோயாளியை சிகிச்சைக்கு சேர்த்துக்கொண்டு அவரது உறவினர்கள் மூலம்மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் காப்பீட்டுஅட்டை எண் பெற தேவையான ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

நோயாளிகள் அதிக தூரத்துக்கு சென்று சிரமப்படக்கூடாது என்பதற்காக அரசு அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனைகளை காப்பீட்டு திட்டத்தில் இணைத்துள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு மற்றும் 3 மாவட்டஅரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் உமா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ள 22 ஆயிரம் பேர் மே 7-ம் தேதி முதல் இன்று வரை கரோனா தொற்றுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

மே 7-ம் தேதிக்கு முன் கரோனா சிகிச்சைக்காககாப்பீட்டு திட்டத்துக்கு ரூ.6 கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது ரூ.400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமான மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோயும் காப்பீட்டு திட்டத்துக்குள் வருகிறது. இந்தோய்க்கு இதுவரை 350 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT