தமிழகத்தில் கோயில்களை வழிபாட்டுக்காக திறக்க வலியுறுத்தி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயில் முன்பாக மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர். அடுத்த படம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர். 
Regional01

வேலூர், தி.மலையில் இந்து முன்னணியினர் போராட்டம் :

செய்திப்பிரிவு

வேலூர், தி.மலையில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கோயில்களை வழிபாட்டுக்காக திறக்க வலி யுறுத்தி இந்து முன்னணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் கோயில்கள் முன்பாக நேற்று சூடம் ஏற்றி போராட்டம் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் செல்லியம்மன் கோயில் முன்பாக மாவட்டப் பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து முன்னணியினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

போராட்டத்தில், “கோயில் களை திறந்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இறுதியில், மாவட்டச் செயலாளர் ஏ.எம்.செந்தில் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT