கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 2,376 கனஅடி நீர்வரத்து இருந்தது. நேற்று 7,492 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 89.36 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 89.15 அடியானது. அணை நீர்த்தேக்க பகுதியில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்து அதிகரிப்பால் அதிக மீன்கள் ஆற்றில் வரும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.