ஓசூர் வனக்கோட்டம் உரிகம் காப்புக்காட்டில் வனப்பணி யாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜோடுகரை ஏரி அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது.
மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில், ஓசூர் கோட்ட தலைமையிட உதவி வனப்பாதுகாவலர் கார்த்திகேயிணி, உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடம் சென்றனர். உயிரிழந்த பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யானையின் உடலில் ஆண் குட்டி இருந்துள்ளது. பெண் யானை குட்டியை பிரசவிக்க இயலாமல் உயிரிழந்துள்ளது, என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு
மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் பர்கூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ், யானையின் உடலை சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்தார். இறந்த பெண் யானைக்கு 30 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.