சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
Regional02

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் - கரோனா நிவாரணம் வழங்கக்கோரி ரேஷன் கடை முற்றுகை :

செய்திப்பிரிவு

கரோனா நிவாரணம் வழங்கக் கோரி சிதம்பரம் அருகே உள்ளகொத்தங்குடி ஊராட்சி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை யிட்டனர்.

கொத்தங்குடி ஊராட்சி அலு வலகம் முன்பு பிச்சாவரம் கூட்டுறவு விற்பனை சங்கங்கத்திற்கு உட்பட்ட பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இந்தக் கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட் கள் வழங்கப்படுகிறது. பகுதிநேர கடை என்பதால் வாரத்தில் இரு நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக பொருட் கள் வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் கடைக்கு நேற்று 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று, கரோனா நிதி, நிவாரண பொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டனர். அதற்கு, "நிவாரண பொருட்கள் வரவில்லை. தற்போது இருக்கும் அரிசி உள் ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கிகொள்ளுங்கள்" என கடை ஊழியர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொது மக்கள் ரேஷன் கடையை முற்று கையிட்டதால் கடை மூடப்பட்டது.

பின்னர் அண்ணாமலைநகர் போலீஸார் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை வரிசைபடுத்தி கரோனா நிவாரண நிதி மற்றும் நிலுவையில் இருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பகுதி நேர ரேஷன் கடையை முழு நேரக்கடையாக மாற்றினால் தான் தங்கு தடையின்றி அனைத்து பொருட்களும் கிடைக்கும். இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூரில் உள்ள ரேஷன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு அடங்கிய பைகளை எலி கடித்துள்ளன. அதனால் அதில் உள்ள பொருட்கள் கலந்து கொட்டியுள்ளது.

இதனை பொதுமக்கள் வாங்க மறுத்து வருகின்றனர். மேலும் மாதந்தோறும் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT