ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சீனங்குடியைச் சேர்ந்த மாணிக்கம் மகள் மணிஷா (19). தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட மணிஷா நேற்று மருத்துவமனை குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பஜார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.