கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.1 கோடியே 67 லட்சத்து 71 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 150-க்கு கீழ் குறைந்தது. தற்போது 1208 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தடுப்பூசி நேற்று வரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 418 பேருக்கு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 6 ஆய்வகங்கள் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் குறைந்து வந்தாலும், விதிமுறைகள் மீறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதன்படி, முகக்கவசம் அணியா தவர்கள், தனிமைப்படுத்துதல் விதிமுறை மீறியவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்காதவர்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங் களிலிருந்து அபராதமாக ரூ.1 கோடியே 67 லட்சத்து 71 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் குறைந்து வருவதால், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வாங்க வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.