திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்):
கோவில்பட்டி 41.20, தேவிமங்கலம் 34, திருச்சி நகரம் 32, ஜங்ஷன் 31, நந்தியாறு தலைப்பு 26.20, மருங்காபுரி 25.40, நவலூர்குட்டப்பட்டு 25, சமயபுரம் 24.20, பொன்மலை 20.80, விமானநிலையம் 19.70, புள்ளம்பாடி 15.60, கல்லக்குடி 10.20, துவாக்குடி, முசிறி தலா 10, மணப்பாறை 7.80, வாத்தலை அணைக்கட்டு, புலிவலம் தலா 7.