திருநெல்வேலி பேட்டையை அடுத்த அத்திமேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேர்மத்துரை (30). இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற கவிதா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கவிதாவுக்கும், திருநெல்வேலி டவுன் அருகேயுள்ள லாலுகாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்றஇளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை சேர்மத்துரை கண்டித்தார்.
கடந்த 2 நாட்களுக்குமுன் ராமச்சந்திரனும், கவிதாவும் டவுன் அருகே ராம் நகரில்தனியாக வீடு வாடகை எடுத்து தங்கினர். நேற்று அங்கு சென்ற சேர்மத்துரை அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது, அரிவாளால் வெட்டப்பட்ட ராமச்சந்திரனும், கவிதாவும் பலத்த காயங்களுடன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி கவிதா உயிரிழந்தார். சேர்மத்துரையை டவுன் போலீஸார் கைது செய்தனர்.