தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வசந்தா, துணைத் தலைவர் விஜயன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரி, சித்திரை, நயினார், சுந்தரி, சித்ரா சயணன், ரமேஷ், தனேஷ், முத்து செல்வன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜிடம் அளித்த மனு: வைகுண்டம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை செயல்படவிடாமல் திமுகவினர் தடுக்கின்றனர். அதிமுக ஆதரவு கவுன்சிலர்களை திமுகவுக்கு ஆதரவு தருமாறு மிரட்டி வருகின்றனர். இதனை தடுத்து வைகுண்டம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தொடர்ந்து முறையாக செயல்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வழக்கறிஞர்பிரிவு செயலாளர் யு.எஸ். சேகர்,சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.