Regional01

இணையதளம் மூலம் பணமோசடி - பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

இணையதளம் வாயிலாக பல்வேறு வழிகளில் பணம் மோசடி நடைபெறுவதால் பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அந்தந்த பகுதி களில் உள்ள சைபர் க்ரைம் காவல் துறையினரை தொடர்பு கொள்ளலாம் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஓய்வூதியர் கள், வயதானவர்கள், பெண்களை குறி வைக்கும் இணையவழி திருடர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். வங்கி மேலாளர் பேசு கிறேன் எனக்கூறி தொலைபேசி அல்லது அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சைபர் திருடர்கள் அவர்களை ஏமாற்றி வங்கி எண், ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்க எண், ரகசிய குறியீடு எண், தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண் ஆகியவற்றை கேட்டு தெரிந்துக்கொண்டு வங்கி கணக்கில் இருந்து பணத்தை இணையவழி பரிவர்த்தனை மூலம் திருடும் சம்பவம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

எனவே, வங்கி கணக்கு எண், ஓடிபி எண் ஆகியவற்றை கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம்.

இது மட்டுமின்றி தற்போது நூதன மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, போலியான முகநூல் பக்கத்தை தொடங்கி நமக்கு தெரிந்த நபர்களின் பெயர் களை பயன்படுத்தி அவசர தேவைக்கு பணம் தேவை என விளம்பரப்படுத்தி அதன் மூலமும் பண மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும், பணத்தை இரட்டிப் பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றும் இணையதள வர்த்தக செயலிகளான ‘பவர் பேங்க் ஆப்’ உள்ளிட்ட செயலிகளில் பணம் செலுத்தி யாரும் ஏமாற வேண்டாம். குறிப்பாக, பெண்கள் இணையதளம், சமூக வலைதளங்களில் தங்களது சுய விவரங்களையோ அல்லது தனது குடும்பத்தினர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம்.

பணம் பறிக்கும் கும்பல்...

வங்கியில் வங்கி கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் எனக்கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர வீடு அல்லது காலி நிலத்தில் டவர் வைக்க அனுமதி வழங்கினால் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் எனக்கூறி உங்களது ஆசைகளை தூண்டி அதன் மூலம் முன்பணம் செலுத்துங்கள் என குறிப்பிட்ட தொகையை ஏமாற்றும் கும்பலும் உள்ளார்கள். அவர்களிடம், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா பரவலை பயன்படுத்தி இணையதளத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் குறைந்த விலையில் உள்ளதாகவும், ஆக்சி மீட்டர் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறி செல்போன் எண்களை வெளியிட்டு அதன் மூலமும் பணமோசடி நடந்து வருகிறது.

ஆன்லைன் வர்த்தகம் மோசடி, மலிவு விலையில் அவசர தேவைக்காக வாகனம் மற்றும் பொருட்களை விற்பதாக கூறி யாரேனும் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT