திருவண்ணாமலையில் பக்தர்களின்றி வெறிச்சோடிய கிரிவல பாதை. 
Regional01

ஆனி மாத பவுர்ணமியையொட்டி - பக்தர்களின்றி வெறிச்சோடிய கிரிவல பாதை :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் ஆனி மாத பங்குனி பவுர்ணமி நாளான நேற்று தடை உத்தரவு காரணமாக பக்தர்களின்றி கிரிவலப் பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை, பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு பங்குனி மாதம் முதல் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை உத்தரவு, நடப்பாண்டில் ஆனி மாதத்திலும் தொடர்கிறது.

பவுர்ணமி நாளான நேற்று கிரிவலம் செல்வதற்காக, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருவதை தவிர்க்கு மாறு மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது. மேலும், பொது போக்குவரத்துக்கான தடையும் தொடர்வ தால், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருவதும் தடைபட்டு போனது.

இதற்கிடையில், தடை உத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க, கிரிவலப் பாதையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கு அமலில் இருந்தாலும் கிரிவலம் செல்வ தற்காக வந்த பக்தர்கள் சிலரை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதனால், பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பாதங்களை சுமந்த கிரிவலப் பாதை நேற்று வெறிச்சோடியது.

SCROLL FOR NEXT