ஆரணியில் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பிஸ்கெட் மற்றும் குளிர்பானத்தை வழங்கிய சுகாதார துறையினர். 
Regional01

ஆரணியில் - தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பிஸ்கெட், குளிர்பானம் வழங்கல் :

செய்திப்பிரிவு

ஆரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கு பிஸ்கெட் மற்றும் குளிர்பானம் நேற்று வழங்கப் பட்டது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தி.மலை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக தீவிரப்படுத்தப்பட் டாலும், மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது. இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் பரிசு வழங்குவதுபோல், தி.மலை மாவட்டம் ஆரணியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பிஸ்கெட் மற்றும் குளிர்பானம் ஆகியவை பரிசாக வழங்கப் பட்டன. ஆரணி நகரில் நேற்று 3 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்களுக்கு தன்னார்வலர் ஜெயகாந்தன் ஏற் பாட்டின் பேரில் பிஸ்கெட் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT