வந்தவாசி அடுத்த வெண்குன்றம் ஊராட்சியில் உயர்கோபுர மின் விளக்கை இயக்கி வைத்த ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம். 
Regional02

வெண்குன்றம் ஊராட்சியில் 3 உயர்கோபுர மின்விளக்குகள் :

செய்திப்பிரிவு

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் ஊராட்சியில் கிராம மக்களால் திரட்டப்பட்ட நிதியின் மூலமாக ரூ.6.30 லட்சம் மதிப்பில் 3 உயர் கோபுர மின் விளக்குகள் நேற்று பயன்பாட்டுக்கு வந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்குன்றம் ஊராட்சியில் உள்ள 3 இடங்களில் தலா ஒரு உயர்கோபுர மின் விளக்கு அமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக, அவர்களாகவே ரூ.6.30 லட்சம் நிதி திரட்டினர். இதையடுத்து, சிவன் கோயில் அருகே பண்டாரந்தோப்பு பகுதியில் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மின் விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வெண்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி வேலு தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, ஊராட்சி துணைத் தலைவர் ராஜேஸ்வரி மோகன், ஒன்றியக்குழு உறுப்பினர் எழிலரசி தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயமணி ஆறுமுகம் உயர்கோபுர மின் விளக்குகளை இயக்கி வைத்தார். இதில், கிராம மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT