Regional01

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் :

செய்திப்பிரிவு

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் சீரான மின் விநியோகம் செய்ய உயரழுத்த மின்பாதையின் 726 இடங்களில் மின்கம்பிகளை உரசிச் சென்ற மரக்கிளைகள் உள்ளிட்ட தடைகள் அகற்றப்பட்டன.

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் கந்தம்பட்டி, அஸ்தம்பட்டி, வீரபாண்டி, உடையாப்பட்டி, மல்லூர், வேம்படிதாளம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் கடந்த 19-ம் தேதி முதல் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் கூறியதாவது:

சேலம் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட 6 கோட்டங்களில், உயரழுத்த மின் பாதைகளில் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை, அனைத்துப் பொறியாளர்கள், 300 களப்பணியாளர்களைக் கொண்டு, 726 இடங்களில் மின்பாதைகளில், மின் கம்பிகளை உரசிச் சென்ற மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

மேலும், 135 இடங்களில் உள்ள பழுதடைந்த இன்சு லேட்டர்கள் கழற்றப்பட்டு, புதிய பாலிமர் இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டன. 86 இடங்களில் ஏபி சுவிட்சுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி கள் வரும் 28-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT