Regional02

பஞ்சமாதேவி குடிமராமத்தில் முறைகேட்டை கண்டித்து முற்றுகை :

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சி தாதம்பாளையத்தைச் சேர்ந்த சீனுவாசன் என்பவர் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளருக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், “பஞ்சமாதேவி கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியில் குடிமராமத்து பணி செய்யாமல் ரூ.35 லட்சம்முறைகேடு செய்துள்ளனர்.இதில் நடவடிக்கை எடுக்கக்கோரி,சில நாட்களுக்கு முன் ஏரியில் குடிசை போடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். வட்டாட்சியர் வெங்கட சுப்ரமணியன்தலைமையில் அமைதிக் கூட்டம்நடந்தது.

அப்போது தெரிவித்தவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று குறிப்பிட்டி ருந்தார். இதுதொடர்பாக அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று விழுப்புரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT