இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் நிதியுதவி வழங்கினார் திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரி. 
Regional02

மறைந்த காவலரின் குடும்பத்துக்கு நிதி :

செய்திப்பிரிவு

கொடைக்கானலில் காவலராக பணிபுரிந்த ஜெயசீலன் என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்து இவருடன் 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள், அவருடன் பணிபுரிந்த போலீஸார் சேர்ந்து ரூ.14 லட்சம் நிதி திரட்டினர். இதை அவரது குடும்பத்தினரிடம் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடை பெற்றது. இதில் ஜெயசீலனின் முதல் மகன் சாந்தசீலனுக்கு ரூ.2 லட்சம், 2-வது மகன் உதயசீலனுக்கு ரூ.5 லட்சம், மனைவி கிளாராவுக்கு ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.14 லட்சத்தை காசோலையாக திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, எஸ்.பி. ரவளி பிரியா ஆகியோர் வழங்கினர்.

SCROLL FOR NEXT