தூத்துக்குடி பாலையாபுரத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் (43). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று காலை தனது வீட்டில் செல்ப் கட்டுவதற் காக பக்கவாட்டுச் சுவரை உடைத்து ள்ளார். அப்போது அவர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் தனசேகரன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.