திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் திருத்தேர் முன் அடியார்கள் திருமுறை விண்ணப்பம் செய்தனர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் - திருத்தேர் முன் அடியார்கள் திருமுறை விண்ணப்பம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் திருத்தேர் முன் அடியார்கள் திருமுறை விண்ணப்பம் செய்தனர்.

இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா நடைபெறாத நிலையில், இவ்வாண்டும் பக்தர்கள் பங்கேற்பு இன்றி இத் திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் கும்பம் வைத்து வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாளான நேற்று பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து இழுக்க 4 ரதவீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். கரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறவில்லை. எனினும் நேற்று சுவாமி திருத்தேர் முன், ஆண்டாண்டு காலமாக தேர் புறப்படும் முன் பாடப்படும் ஒன்பதாம் திருமுறையில் திருப்பல்லாண்டு பதிகம் அடியார்களால் பாடப்பட்டு, திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT