Regional02

கடலூர் மாவட்டத்தில் : கரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக179பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில்56,910பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 269 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில்54,440 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,515பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை 731 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 103பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்41,850பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 304பேர் குணமடைந்தனர். இவர்களைச் சேர்த்து 40,532பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 993பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 325பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 134 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 26,126 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மேலும் இருவர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் இதுவரை 190 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT