சேலம் மாவட்டத்தில் நேற்று 485 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகரப் பகுதியில் 91 பேரும், வட்டார அளவில் வீரபாண்டியில் 26, தாரமங்கலத்தில் 25, நங்கவள்ளியில் 20, ஓமலூரில் 17, சேலத்தில் 14, அயோத்தியாப்பட்டணத்தில் 12, மேட்டூர் நகராட்சியில் 12, பிற மாவட்டங்களைச் சேர்ந்த 180 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 485 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.