Regional02

மதுபாட்டில் கடத்திய வாகனம் கவிழ்ந்தது :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. ஓட்டுநரின்கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரம் வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடினர்.

சூளகிரி போலீஸார் விபத்துக் குள்ளான வாகனத்தை, அப்புறப் படுத்த முயன்ற போது வாகனத்தில் 2580 கர்நாடக மாநில மதுபாட்டில் இருந்தது. இதனைத் தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT