Regional02

காணாமல்போன செல்போன்கள் மீட்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, செல்போன்களை கண்டுபிடிக்க காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டார். மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி தலைமையில் ஆய்வாளர் ராஜதுரை, உதவி ஆய்வாளர்கள் ராஜரத்தினம்‌, அச்சுதன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

ரூ.6,88,460 மதிப்புள்ள 50 செல்போன்களை அவற்றின் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டுபிடித்து மீட்டனர்.

மீட்கப்பட்ட செல் போன்களை, அந்தந்த காவல் நிலைய காவலர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

SCROLL FOR NEXT