வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள கைதிகளுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
வேலூர் ஆண்கள் மத்தியசிறையில் சுமார் 750-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பாதுகாப்புப் பணியில் 120-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்குகளில் சிறைக்கு புதிதாக வருபவர்களை கரோனா பரிசோதனை செய்து, முடிவு வந்த பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை மத்திய சிறைக்கு அருகில் உள்ள பார்ஸ்டல் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சிறை காவலர்கள், அதிகாரிகள் உள்ளிட் டோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அதன்படி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் என 370 பேருக்கும், பெண்கள் தனிச்சிறை காவலர்கள் 73 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆண்கள் மத்திய சிறையில் உள்ள கைதிகள் 780 பேருக்கு நேற்று முன்தினம் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று இரண்டாம் நாளாக பெண்கள் சிறையில் உள்ள 90 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இது தொடர்பாக மத்திய சிறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் கைதிகள் அனை வருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆண்கள் மத்திய சிறையில் உள்ள 780 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இன்று (நேற்று) பெண்கள் சிறையில் உள்ள 90 கைதி களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. சிறையில் உள்ள கைதிகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது’’ என தெரிவித்தனர்.